நேரமாக நேரமாக பதற்றமான பெற்றோர் வேறு வழியில்லாமல் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு ெசய்த போலீஸ் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குள்ளஞ்சாவடி போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாத குப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது மாயமான கல்லூரி மாணவர் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் நின்றுக்கொண்டிருந்தார். உடனே போலீஸ் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.