Education Loan: மிஸ் பண்ணிடாதீங்க! மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்! என்னென்ன சான்றிதழ் தேவை?

First Published | Sep 11, 2024, 8:51 AM IST

Education Loan: சேலத்தில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கலாம்.

College Student

தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்களிடம் படிப்பில் திறமை இருந்தும் குடும்ப சூழ்நிலை மற்றும் வசதியில்லாததால் படிக்க முடியாமல் போய் விடுகிறது. இந்நிலையில் வசதியற்ற மாணவர்கள் படிக்க ஏதுவாக வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் சேலம் மாவட்டம் ஆர்.பி.சாரதி இண்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் கல்விக்கடன் மேளா நடைபெறுகிறது.  இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Schools Holiday: மாணவர்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Salem District Collector

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், பூசாரிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.பி.சாரதி இண்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் கல்விக்கடன் மேளா நடைபெறுகிறது.  இந்த முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Education Loan

அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள கல்விக் கடன் மேளாவில் ஏற்கனவே கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதையும் படிங்க:  Quarterly Exam Holiday: காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Education Loan Camp

இம்முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும். 12- ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

Documents

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக் கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல், வருமான சான்று நகல், கல்லூரி அடையாள அட்டை, வங்கிகணக்கு புத்தக நகல், கல்வி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்றிதழ், வித்யாலஷ்மி ஜன்சமார்த் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் விண்ணப்ப நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வரவேண்டும்.  இக்கல்விக் கடன் மேளாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் வழங்கும் கல்விக் கடன் விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலித்து கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Videos

click me!