வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!
Edappadi Palanisamy: பாஜக கூட்டணியே இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென சரணடைந்தது ஏன் என்ற தகவலை அதிமுக நிர்வாகி வெளியிட்டுள்ளார்.
Edappadi Palanisamy: பாஜக கூட்டணியே இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென சரணடைந்தது ஏன் என்ற தகவலை அதிமுக நிர்வாகி வெளியிட்டுள்ளார்.
இனி எந்த காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜகவிடம் சரண்டரானது எப்படி என்ற தகவலை அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சில மாதங்களுக்கு முன்னர், எடப்பாடிக்கு நெருக்கமான ஈரோடு ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அங்கு பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கிருந்து நூல் பிடித்து, விசாகப்பட்டினத்திலுள்ள ஒரு இரும்பு ஆலையில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், மிகப்பெரிய அளவில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதையும் கண்டுபிடித்தனர். இந்த விவகாரங்களில், எடப்பாடியின் மகன் மிதுனும் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. இந்தச் சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்ட அமித் ஷா, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலமாக சேலத்துக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில்தான் ஆடிப்போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: இபிஎஸ்-ஐ தொடர்ந்து செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! யாரை சந்தித்தார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான மூன்று தொழிலதிபர்கள், ‘உங்களோடு இருப்பதால்தான் எங்களையும் குறிவைக்கிறது டெல்லி. அவர்கள் ஓங்கி அடித்தால் எங்களுடைய தொழிலே மொத்தமாக நாசமாகிவிடும்’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாகத் தன்னுடன் பழகிய நண்பர்களே டெல்லியின் ஆட்டத்துக்கு பயந்து ஒதுங்கிக்கொண்டது, எடப்பாடியை உளவியல் ரீதியாக பாதித்துவிட்டது. தன்னுடைய தலைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டார் இபிஎஸ்.
சந்திப்பின் போது கத்தையாக டாக்குமென்ட்டைத் தூக்கி மேஜையில் போட்ட அமித் ஷா, ‘எல்லாம் உங்களைப் பற்றிய டாக்குமென்ட்டுகள்தான்’ எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார். அதைக் கேட்டதும், எடப்பாடியின் முகம் வெளிறிப்போயிருக்கிறது. அங்கேயே, அடுத்த நொடி... அமித் ஷாவிடம் சரண்டராகியிருக்கிறார் எடப்பாடி.
இதையும் படிங்க: உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறை! எப்படி துடைக்கப் போறீங்க ஸ்டாலின்? கொதிக்கும் இபிஎஸ்!
“தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தன் மகனையும் தன் சகாக்களையும் ரெய்டு, கைது அஸ்திரங்களிலிருந்து பாதுகாக்கவும் தான் அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார் இபிஎஸ். ஆனால், ‘தமிழகத்தின் நலனுக்காகச் சந்தித்தேன்’ என்று பச்சையாகப் பொய் சொல்வது, மக்களை முட்டாளாக்கும் செயல். இதனால் மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அவர்மீதான நம்பிக்கை குறையும். மேலும் இந்தச் சந்திப்பை, முறையாக மீடியாக்களிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்க முடியும். இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. ஆனால், தன் சொந்தப் பிரச்னைகளின் பதற்றத்தில் மொத்தமாகச் சொதப்பியிருக்கிறார் எடப்பாடி. இப்போது அவர் காட்டி வந்த வீராப்பு பிம்பமெல்லாம் சுக்குநூறாக உடைந்துபோயிருக்கின்றன.
எடப்பாடியின் இந்தச் சந்திப்புக்குப் பிறகு, கூட்டணிக்கான பரிசம் போடப்பட்டுவிட்டதாக உணரும் அ.தி.மு.க-வினர், ‘சிறுபான்மையினரும், பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் கடந்த தேர்தலில் நம்மைப் புறக்கணித்தார்கள். இந்த முறையும் புறக்கணிக்கப்போகிறார்கள்’ எனக் கொதிக்கிறார்கள். ஆனால், தேர்தல் கணக்குகளையெல்லாம் யோசிக்க நேரமில்லாமல், டெல்லியில் கொண்டுபோய் கட்சியை அடமானம் வைத்துவிட்டு வந்துவிட்டார் இபிஎஸ் என தெரிவித்துள்ளார்.