Public Examinations Department Alert பள்ளி மாணவர்களுக்கு கல்வி தான் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. அந்த வகையில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு தான் மாணவர்களின் கற்றல் ஆற்றலை வெளிப்படுத்தும். அதன் படி 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வானது தமிழக அரசு சார்பாக பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது.
அந்த வகையில் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களின் படி தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திலும் 11வது மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ளது. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
school exam
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனர். இதற்காக 4,113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 296 தேர்வு மையங்களில் 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரம் மாதம் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கு தேர்வு அறை கண்காணிப்பாளராக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 10ஆம் வகுப்பு தேர்விற்கு 4,113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஆசியர்கள் பணியில் அமர்த்த வேண்டிய நிலை உள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
இதனையடுத்து தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களையும் தேர்வு பணிக்கு பொதுதேர்வுத்துறை நியமித்துள்ளது. ஆனால் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் பொதுத்தேர்வின் போது உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக அரசின் பொதுத்தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை
அதன் படி தேர்வு துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வராமல் இருந்தால் அந்த பள்ளி நிர்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்வு பணிக்கு தங்கள் ஆசிரியர்களை தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்பிவைக்க வேண்டும் அந்த உத்தரவில் பொதுத்தேர்வு துறை கூறியுள்ளது.