Reduction in registration fees for property registration in the name of women தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் படி பெண்கள் சொந்த காலில் நிற்கும் வகையிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்திடும் வகையில் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதன் படி மகளிர் உரிமை தொகை என்கிற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அடுத்ததாக உயர்கல்வி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது
மகளிர்களுக்கான திட்டங்கள்
மேலும் பெண்கள் சொந்த தொழில் செய்து உயர்ந்திடும் வகையில் மகளிர்களுக்கு தொழில் தொடங்க மானிய உதவி, கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. திருமண உதவித்தொகை திட்டம், மகப்பேறு உதவி திட்டம், பெண் குழந்தைகள் வைப்பு தொகை திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு மகளிர்களிடம் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், தற்போது புதிய திட்டத்தை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில்,
பெண்கள் பெயரில் சொத்துக்கள்
வரும் 01-04-2025 முதல், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என கூறப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி,
magalir urimai thogai
1 சதவிகிதம் தள்ளுபடி- வெளியான அரசாணை
பத்து லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைத்து அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதே போல மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் வகையில் 20 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவும் விரைவில் அரசாணையாக வெளியிடப்படும் என தமிழக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.