சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கப்போகுதாம்!
TN Weather Update: தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வானிலை மையம் வரும் நாட்களில் 100 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரித்துள்ளது.
TN Weather Update: தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வானிலை மையம் வரும் நாட்களில் 100 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் 100 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 31ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதையும் படிங்க: சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்! யாரெல்லாம் தெரியுமா?
ஏப்ரல் 01ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 2 முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மார்ச் 31 முதல் ஏப்ரல் 02ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இதையும் படிங்க: 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.