TN Govt Free Courses
தமிழ்நாடு அரசு இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதோடு, அதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. சமீப காலங்களில் யூடியூப் சேனல் தொடங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு புதிய யூடியூப் சேனல் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
Online course by TN Govt
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் 'சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்' என்ற மூன்று நாள் பயிற்சியை நடத்த உள்ளது. இந்த பயிற்சி 22.04.2025 முதல் 24.04.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
இதில் யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், பார்வையாளர்களைக் கவர்தல், ஆன்லைன் மார்க்கெட்டிங், டொமைன் பெயர் & ஹோஸ்டிங் பதிவு, இணையதள வடிவமைப்பு ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.
TN Govt YouTube Channel Training
இந்த பயிற்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோருக்கு குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.
TN Govt YouTube Training
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை அறிய www.editn.in இணையதளத்தில் பார்வையிடலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்புகொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நடைபெறும் இடம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஐடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 936022128 / 9543773337.