அன்புமணியின் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். இதனால் அவர் திமுக கூட்டணிக்குச் செல்லத் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது.
பாமகவின் நீண்டகால அரசியல் எதிரியான திருமாவளவனின் விசிகவைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ராமதாஸ் தரப்பு கூறியிருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் சேர்வதற்கு விசிக பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
பாமக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம்
பாமக இருக்கும் கூட்டணியில் எந்த காலத்திலும் இருக்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில், இதே கருத்தை இன்றும் உறுதிப்படுத்திய திருமாவளவன், ''பாமக, பாஜக அங்கம் கூட்டணியில் விசிக இருக்காது என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.