திருமா முன்னிலையில் வழக்கறிஞர் மீது தாக்குதல்.. RSS, பாஜக.வின் திட்டமிட்ட சதி - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published : Oct 10, 2025, 01:27 PM IST

உயரநீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞரகள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது என திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.

PREV
14
வழக்கறிஞரை தாக்கிய திருமா ஆதரவாளர்கள்

சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த 7ம் தேதி விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் கார் மோதியதைத் தொடர்ந்து வழக்கறிஞர் மற்றும் திருமா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது திருமாவளவன் காரில் இருந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே அவரது ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கத் தொடங்கினர். உடனடியாக திருமாவளவனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த பார் கவுன்சிலுக்குள் அழைத்துச் சென்று வழக்கறிஞரை காப்பாற்றினர்.

24
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமாவளவன் முன்னிலையிலேயே அவரது ஆதரவாளர்கள் வழக்கறிஞரை தாக்கியது அநாகரீகத்தின் உச்சம், திருமாவ அவர்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

34
தன்னிலை விளக்கம் அளித்த திருமாவளவன்

இதனிடையே மோதல் தொடர்பாக திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு எனது கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதவில்லை. ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேண்டுமென்றே எனது வாகனத்தின் குறுக்கே வந்து எனக்கு இடையூறு ஏற்படுத்தினார். அப்போது எனது ஓட்டுநர் வழி விடக்கோரி ஒலி எழுப்பிய போது அவர் என்னை பார்த்து முறைத்துக் கொண்டு எனது வாகனத்தை நோக்கி வந்தார். அப்போது என்னுடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்தனர். அவர் தொடர்ந்து எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த எனது ஆதரவாளர்கள் அவரை கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை பார் கவுன்சிலுக்குள் அழைத்துச் சென்றுவிட்டனர் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

44
திருமாவுக்கு எதிராக திட்டமிட்டு சதி..?

இந்நிலையில் இன்று திருமா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “உயரநீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞரகள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories