காவலர் தேர்வுக்கு தயாரா.! தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தி- வெளியான சூப்பர் அறிவிப்பு

Published : Oct 10, 2025, 12:45 PM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 3665 காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. 

PREV
14

போலீஸ் வேலையில் இணைய வேண்டும் என்பது பலரது கனவாகும். இதற்காக இரவு பகலாக படிப்பது மட்டுமில்லாமல் உடற்பயிற்சியும் தீவிரமாக மேற்கொள்வார்கள். அந்த வகையில் இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 + 21 (shortfall vacancy) இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றம் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 21.08.2025 அன்று வெளியிடப்பட்டது. இதன் தொடர்ந்து எழுத்து தேர்வு 09.11.2025 அன்று நடைபெற உள்ளது.

24

இந்த எழுத்து தேர்வில் தயாராகும் வகையில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலைக் காவலர், 

இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றம் தீயணைப்பாளர் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார்.

34

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

44

மேலும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை பின்வரும் கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டு https://forms.gle/GmvpmCvqDGRPIBW96-

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக (அலுவலக வேலை நாட்களில்) 17.10.2025 தேதிக்குள் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். 

மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories