திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சுயமரியாதை இயக்கமாக உருவானது, திமுகவின் முக்கிய கொள்கைகள் சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, மற்றும் தமிழ் தேசிய உணர்வை வலியுறுத்துவது ஆகும்.
அந்த வகையில் திமுக, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு உரிமைகள் பெறுவதற்காகவும் போராடியது. தமிழகத்தில் திமுக 1967இல் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்து அண்ணாதுரை முதலமைச்சரானார். இதனை தொடர்ந்து கருணாநிதி, ஸ்டாலின் போன்ற தலைவர்கள் வழியாக திமுக தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உள்ளது.
24
அரசியல் களத்தில் உதயநிதி
அந்த வரிசையில் திமுகவின் அடுத்த வாரிசாக உதயநிதி களத்தில் உள்ளார். 2018ஆம் ஆண்டு இறுதியில் அரசியலில் இறங்கிய உதயநிதி, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் திமுக 39 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றது.
இதற்கு பரிசாக உதயநிதிக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி பெற்றார். அடுத்த சில மாதங்களிலேயே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டது.
34
உதயநிதியின் அசூர வளர்ச்சி
விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வந்த ஒரு வருடத்தில் உதயநிதிக்கு துணை முதலமைச்சராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த உதயநிதி 6 வருடங்களில் உச்சபட்ட பதவியை பிடித்தார். ஆட்சியில் தான் இப்படி என்றால் கட்சியிலும் உதயநிதியின் வளர்ச்சி படு வேகமாகவே உள்ளது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் நடைபெறும் திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக மூத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி காலில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் விழுந்து வாழ்த்து பெற்றார். இந்த வீடியோ காட்சி தற்போது பரவி வருகிறது. 50 வயதுள்ள உதயநிதி காலில் 60 வயதுடைய எம்எல்ஏ விழுந்து ஆசிர்வாதம் பெறுவதை விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயலலிதா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதை விமர்சித்த திமுக, தற்போது மூத்த திமுக நிர்வாகி ஒருவர் தன்னுடன் 10 வயது குறைவாக உள்ள உதயநிதி காலில் விழுவதா என கிண்டல் செய்து வருகிறார்கள். இது தான் சுயமரியாதையா.? இது தான் திராவிட பாலிடிக்ஸா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.