குடியரசு விடுமுறையை தொடர்ந்து அடுத்த லீவு தொடர்பான அறிவிப்பு வெளியானது.. குஷியில் பள்ளி மாணவர்கள்!

Published : Jan 27, 2026, 11:10 AM IST

Holiday: கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, நாளை (ஜனவரி 28) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொருந்தும்.

PREV
15
தொடர் விடுமுறை

அரையாண்டு, பொங்கல், குடியரசு தினம் போன்ற தொடர் விடுமுறைகளால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் குஷியில் இருந்து வந்தனர். இந்நிலையில் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கோயில் குடமுழுக்கு, மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அதன்படி நாளைய தினம் கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

25
தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில்

கரூரில் உள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில். இக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று வழிபட முடியாதவர்கள் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமியை தரிசனம் செய்து வருவது வழக்கம். இக்கோவிலுக்கு கடந்த 2014ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

35
குடமுழுக்கு விழா

இந்நிலையில் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு ஜனவரி 28ம் தேதி அதாவது நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்காக உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கரூர் வட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
பள்ளி கல்லூரிகள் விடுமுறை

எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், அத்தியாவசிய பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது.

55
பிப்ரவரி 7ம் தேதி வேலை நாள்

அதேபோல், மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories