மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு போட்டியாக, அதிமுக ரூ.2000 வழங்கும் குலவிளக்கு திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், ஆளும் திமுக அரசு உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல்வேறு அசத்தலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக மற்றவர்களை கையை எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டது.
26
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000
அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக திமுகவின் செல்வாக்கு உயர்ந்தது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரி, கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
36
தமிழகத்தை பின்பற்றும் பல்வேறு மாநிலங்கள்
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதாவது 2வது கட்டமாக புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதன்மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்து நிராகரிப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அவர்களின் விண்ணப்பம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,500 உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது.
56
குலவிளக்கு திட்டம் ரூ.2000
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலினே அதிர்ச்சியாகும் அளவிற்கு அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
66
உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை
எதிர்க்கட்சியான அதிமுகவே ரூ.2000 அறிவித்துள்ள நிலையில் ஆளும் திமுக அரசு ரூ.2,500 கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் குடும்ப தலைவிகள் இருந்து வருகின்றனர். அதிமுக எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகளிர் உரிமை தொகையை எவ்வளவு உயர்த்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பான அறிவிப்பு பிப்ரவரியில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.