Summer
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை வெளியே வரவேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?
Tamilnadu Rain
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், மார்ச் 28 முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதையும் படிங்க: சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
Temperature increased
வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
Chennai weather
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.