டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்! மீறி விற்பனை செய்தால் ஆப்பு தான்!

Published : Sep 04, 2025, 09:09 AM IST

சென்னையில் மிலாதுன் நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும்.

PREV
14
டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால் வருமானம் கொட்டோ கொட்டுனு கொட்டும். அதேபோல் வார இறுதி நாட்களில் ரூ.150 முதல் ரூ.200 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகும்.

24
8 நாட்கள் மட்டுமே விடுமுறை

இந்நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அரசு பணியில் இருந்தாலும் இவர்களுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் நாளை மிலாது நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

34
சென்னை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வருகின்ற 05-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாதுன் நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

44
மதுபானம் விற்பனை நடவடிக்கை

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது சென்னைக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories