ஜிஎஸ்டி வரி அடுக்குகள் மாற்றம், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகல், கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம், முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம், கோலி உடற்தகுதி சர்ச்சை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு ஆகியவை இன்றைய TOP 10 செய்திகளில்.
ஜிஎஸ்டி கவுன்சில் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, செப்டம்பர் 22 முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வரும். சில பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.
210
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன்
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டணியில் "துரோகம் தலைவிரித்தாடுகிறது" என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
310
கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ₹9,335 கோடியில் அமையவுள்ளது. தமிழ்நாடு அரசு முதல் தவணையாக ₹1,964 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் அதிகார மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரை ராமதாஸ் விதித்த காலக்கெடுவுக்கு, நாளை பதிலளிக்க உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
510
பெரும் போராட்டத்தில் களமிறங்கும் ஈபிஎஸ்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி தாம்பரத்தில் போராட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 2 கீழ்கட்டளை பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், கீழ்கட்டளை பகுதிக் கழகத்தின் சார்பில், 9.9.2025 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணியளவில், 'கீழ்கட்டளை பெரிய தெருபிள்ளையார் கோவில் சந்திப்பு' அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனக் கூறியுள்ளார்.
610
3 நாள் தொடர் விடுமுறை
தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
710
விமானத்தில் ஸ்டாலின் எழுதிய கடிதம்
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ''ஜெர்மனியின் டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன" எனக் கூறியுள்ளார்.
810
இனிமே தான் மழையின் ஆட்டமே
வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செப்டம்பர் 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
910
விராட் கோலி மட்டும் விதிவிலக்கா?
ஆசிய கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படுவதற்காக ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், விராட் கோலிக்கு மட்டும் லண்டனில் உடற்தகுதித் தேர்வு நடத்த பிசிசிஐ அனுமதி அளித்ததால் விமர்சனம் எழுந்துள்ளது.
1010
மக்களை ஏமாற்றும் திமுக
‘‘இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார்’’ என எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
"ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.