கடுப்பான அன்புமணி! நாளை அடுத்த ஆக்‌ஷன்... ராமதாஸ் விதித்த கெடுவுக்கு என்ன பதில்?

Published : Sep 03, 2025, 06:56 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் அதிகரித்து வருகிறது. ராமதாஸ் விதித்த கெடுவுக்கு நாளை பதிலளிக்க உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

PREV
14
அன்புமணிக்கு ராமதாஸ் விதித்த கெடு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் அதிகார மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரை ராமதாஸ் விதித்த காலக்கெடுவுக்கு, நாளை பதிலளிக்க உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

24
ராமதாஸ் - அன்புமணி மோதல்

கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாகம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அன்புமணி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அவர் 2026 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பதிலடியாக, ராமதாஸ் புதுச்சேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

34
அன்புமணிக்கு விதித்த காலக்கெடு நீட்டிப்பு

முதலில், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அவர் பதிலளிக்காததால், ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, இந்த காலக்கெடு செப்டம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

44
அன்புமணியின் பதில் என்ன?

இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, "ராமதாஸ் விதித்த காலக்கெடுவுக்கு நாளை நான் பதிலளிப்பேன்" என்று தெரிவித்தார். இது கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலுக்குப் பிறகு இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு முடிவுக்கு வருமா அல்லது மேலும் வலுப்பெறுமா என்பது விரைவில் தெரிய வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories