50 வயசுல இதெல்லாம் தேவையா! ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அலறல்! செய்யக்கூடாததை செய்ததால் தர்ம அடி!

Published : Sep 03, 2025, 05:25 PM IST

ஓமலூரில் இருந்து தாரமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் 50 வயது நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டு, தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

PREV
14

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டியைச் சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தாரமங்கலம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் தாரமங்கலம் செல்ல டிரைவர் சீட்டுக்கு பின் வரிசை சீட்டில் அமர்ந்திருந்தார்.

24

அவரது இருக்கைக்கு பின்னால் 50 வயது மதிக்கத்தக்க நபர் அமர்ந்திருந்தார். பேருந்து பெரியாம்பட்டி ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால், பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

34

அதை தொடர்ந்து, தாரமங்கலம் பேருந்து நிலையம் வந்தவுடன், அந்த மாணவி கீழே இறங்கி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

44

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பச்சையப்பன் (50) என்பதும், மது போதையில் அவர் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories