இன்ஸ்டாகிராம் காதல்
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சூர்யா (22). இவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடிவரும் வீரபாண்யைச் சேர்ந்த மோகன பிரியன் (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர்.