"எடுத்து சொன்னா அவர் மாறிவிடுவார்" த.வெ.க தலைவர் விஜயின் ஸ்பீச் - தமிழிசை கொடுத்த ரியாக்ஷன்!

First Published | Oct 27, 2024, 11:19 PM IST

Tamilisai and Vijay : தளபதி விஜயின் பேச்சு தான் இன்னும் ஒரு வாரத்திற்கு டாக் ஆப் டவுன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பான ஒரு உரையை ஆற்றியுள்ளார் விஜய்.

Tamilisai

தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் தளபதி விஜய் தன்னுடைய உரையை இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்பாக நிகழ்த்தி இருக்கிறார். அரசியலுக்கு தான் புதியவர் என்றாலும், பல தலைவர்களின் வெற்றி தோல்விகளில் இருந்து விஷயங்களை கற்றுக் கொண்டு, சிறப்பான ஒரு பிளானோடு தான் இந்த அரசியல் களத்தில் தான் களமிறங்கியுள்ளதாகவும், தன்னுடைய நடிப்பு பயணத்தில் உச்சத்தில் இருந்த தான், அந்த புகழையும் பணத்தையும் விட்டுவிட்டு மக்களாகிய உங்களை நம்பி தான் இந்த அரசியல் களத்தில் இறங்குகிறேன் என்றும் அதிரடியாக பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

மாநாட்டில் குட்டி ஸ்டோரி சொல்லி விஜய் பில்டப் கொடுத்த அந்த பாண்டிய மன்னன் யார்?

vijay meeting

தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன விஷயங்கள் செய்யப்படும். ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் எந்தெந்த விஷயங்கள் அகற்றப்படும் என்று பல விஷயங்களை தளபதி விஜய் பேசினார். ஆனால் அவருடைய பேச்சில் பகிரங்கமாக ஒரு தேசிய கட்சியையும், ஒரு மாநில கட்சியையும் எதிர்த்து பேசி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி மதவாதம் என்கின்ற போக்கை கடைபிடிக்கும், மக்கள் விரோத செயல்களை செய்யும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தான், தான் செயல்பட போவதாக கூறினார்.

Tap to resize

TVK Leader Vijay

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் என்று அவர் கூறிய அதே வேலை, திராவிட மாடல் என்று கூறி மக்களை ஏமாற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராகத்தான் நான் களமிறங்குகிறேன் என்று ஆணித்தரமாக கூறி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் எதிரானவன் என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் தளபதி விஜய். இந்த சூழலில் தளபதி விஜயின் இந்த பேச்சு பல அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தளபதி விஜயின் பேச்சு குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்துகிறார். 

tamilaga vettri kazhagam

அதில் பாஜக என்று குறிப்பிடாமல், ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு மதவாதத்தை செய்பவர்கள் அவர்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்படி அல்ல, மத்திய ஒன்றிய அரசு என்பது வளர்ச்சிக்கான அரசு. அதைப்பற்றி விஜயிடம் கொஞ்சம் எடுத்துப் பேசினால் அவர் புரிந்து கொள்வார். மத்திய அரசு மற்றும் மோடி பற்றி அவர் தெரிந்து கொள்வார் என்று கூறியிருக்கிறார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் எதிர்ப்பதாக நேரடியாக கூறி இருக்கிறார். உண்மையில் அது மிகப்பெரிய அளவில் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் ஊழல் பெறுக ஒரே காரணம் திமுக தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

"திராவிட மாடல் ஆட்சின்னு ஏமாற்றும் கூட்டம்" நேரடி தாக்குதலை விடுத்த த.வெ.க தலைவர் விஜய்!

Latest Videos

click me!