வீடு, சோறு, வேலை இந்த 3க்கும் உத்தரவாதம் கொடுக்காத அரசு இருந்தா என்ன? போனால் என்ன – தவெக தலைவர் விஜய்!

First Published | Oct 27, 2024, 10:02 PM IST

TVK Leader Thalapathy Vijay Speech at Maanadu: இருக்க வீடு, வயித்துக்கு சோறு, வருமானத்துக்கு வேலை இந்த மூன்றையும் கொடுக்க முடியாத அரசு இந்தா என்ன போனா என்ன தவெக கட்சி தலைவர் தளபதி விஜய் அனல்பறக்க பேசியுள்ளார்.

TVK Manadu, Thalapathy TVK Manadu

TVK Leader Thalapathy Vijay Speech at Maanadu: இசை வெளியீட்டு விழாவில் பேசுவதை விட, சினிமாவில் பேசுவதை விட விக்கிரவாண்டியில் தளபதி விஜய் தனது மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் படை சூழ மிகுந்த ஆரவாரத்துடன் பரபரப்புடம் காணப்பட்ட மாநாடு தளபதி விஜய்யை பார்த்ததும் அமைதியானது.

TVK Vijay Maanadu, TVK Fans, TVK First Conference

அவர் என்ன பேசுவார், எதைப் பற்றி பேசுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் குறிப்பாக அரசியல் தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். யாரெல்லாம் தங்களது எதிரியாக தளபதி விஜய்யை நினைத்தார்களோ அவர்களுக்கு புரியும் படி தெள்ளத் தெளிவாகவே பேசியிருக்கிறார்.

Tap to resize

Tamilaga Vettri Kazhagam, TVK Vijay Manadu

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் உயிர் நாதத்தை நம் அடிப்படை கோட்பாடு கொள்கையாக அறிவித்த போதே நம்முடைய உண்மையான எதிரிகள் யார் என்று தெரிந்துவிட்டது. பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வுகள் இல்லவே இல்லை, கூடவே கூடாது என்று சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்த போதே கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது.

TVK Vijay, TVK Maanadu, Actor Vijay

இப்போ அதிகமாகவே கேட்கும் என்றார். பத்தோட பதினொன்னா எக்ஸ்ட்ரா லக்கேஜா நான் இங்க வரல. உங்களோட மகனா, அண்ணனா, தம்பியா, தோழனா உங்களில் ஒருவனாக இருந்து நான் உழைக்க வேண்டும். ஒவ்வொரு அடியும் பார்த்து பாத்து தான் எடுத்து வைப்பேன். திரும்பி போக மாட்டேன். இது நான் மட்டும் எடுத்த முடிவல்ல. நாங்க எடுத்த முடிவு.

Thalapathy Vijay, Vikravandi Manadu

நாட்டையே பாடுபடுத்துற பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் தமிழக வெற்றிக்கழகத்தின் முழு முதல் எதிரி. ஐடியலாஜிகள் எனிமி. அடுத்து திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் மற்றும் பேரஞர் அண்ணா பேரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்குற ஒரு குடும்ப சுயநல கூட்டம் தான் நம்மளோட அடுத்த அரசியல் எதிரி இப்படியெல்லாம் பேசிய தளபதி அரசியல் குறிக்கோளாக ஒன்றை குறிப்பிட்டார்.

TVK Thalapathy Manadu

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கணும். வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்துக்கு வேலை. இதுதான் எங்களோட அடிப்படை அஜண்டா என்றார். இந்த மூன்றிற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாத அரசு இருந்தா என்ன போனா என்ன என்றார்.

Latest Videos

click me!