சிங்கிள் மெஜாரிட்டியோடு ஜெயிப்போம்; கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் தளபதி விஜய்!

First Published Oct 27, 2024, 7:41 PM IST

TVK Leader Thalapathy Vijay Speech in Maanadu: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில், விஜய் தனது அரசியல் கொள்கைகளை விளக்கி முதல் உரையாற்றினார்.

Tamilaga Vettri Kazhagam, TVK Vijay Maanadu

TVK Leader Thalapathy Vijay Speech in Maanadu:  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் இன்று நடைபெற்றது. இந்த தவெக மாநில மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் பாலாஜி, ஸ்ரீமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் வியந்து பார்க்கும் வகையில் தவெக கட்சியின் இந்த மாநில மாநாடு அமைந்துவிட்டது. அந்தளவிற்கு ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என்று மொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த மாநில மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த தளபதி விஜய் 800 மீ தூரம் வைக்கப்பட்டிருக்கும் மேடையில் ரேம் வாக் நடந்து சென்று ரசிகர்களை சந்தித்தார்.

Thalapathy Vijay, TVK Maanadu, Tamilaga Vettri Kazhagam,

அதன் பிறகு 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதே போன்று மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தனது அப்பா மற்றும் அம்மாவிடம் ஆசி பெற்று தனது முதல் அரசியல் உரையாற்றினார்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் தான் கொள்கை வழிகாட்டும் தலைவர்கள். பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்று களத்திற்கு வரும் முதல் அரசியல் கட்சி நம் தமிழக வெற்றிக் கழகம். கட்சி ஆரம்பித்த போதே அரசியல் எதிரி என்று தெரிந்துவிட்டது. அப்போதே கதறுனாங்க. இப்போது ஓபனாகவே சொல்லியாச்சு. கதறல் அதிகமாத்தான் இருக்கும் என்றார்.

Latest Videos


TVK Maanadu, Tamilaga Vettri Kazhagam

இயல்பான அடிப்படை கொள்கை கோட்பாட்டுக்கு எதிராக இருக்குற மாதிரி மக்களை மதம், சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்று பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் நம் அரசியல் எதிரியா? என்று விஜய் கேள்வி எழுப்பினார். இதன் மூலமாக விஜய் யாரை எதிரியாக கருதுகிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே போன்று நம்மை ஆளும் கரப்ஷன் கபடதாரிகள் தான் என் எதிரி என்று ஆளும் கட்சியையும் விமர்சித்தார்.

TVK First Maanadu, Tamilaga Vettri Kazhagam,

இறுதியாக மக்களோடு மக்களாக தொடர்ந்து களத்தில் நிற்க போகிறோம். தமிழகத்தில் ஒரு வீடு கூட விடாமல் அவர்களது உணர்வா, உறவாக இருப்போம். அவர்களது ஆசியுடன் ஆதரவுடனும் நம்மை சிங்கிள் மெஜாரிட்டியோடு ஜெயிக்க வப்பாங்க என்ற நம்பிக்கை 100 சதவிகிதம் உள்ளது. இருந்தாலும் அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும் நம் செயல்பாட்டை நம்பி நம்முடன் சிலர் வரலாம்

Thalapathy Vijay Speech at TVK Maanadu, Tamilaga Vettri Kazhagam,

அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருபவர்களை நாம் அரவணைக்கலாம். நம்முடன் இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க தயார் என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழத்தின் பெயர்க் காரணத்தையும், கட்சி கொடிக்காண காரணத்தையும் வீடியோ மூலமாக தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

click me!