TASMAC Shop: டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

First Published | Oct 27, 2024, 6:12 PM IST

TASMAC Shop: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும். இந்த விழாவில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமூகத்தினரால் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள்  கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வரும்30ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள். இதன் காரணமாக எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ராமநாதபுரத்தில் எதிர்வரும் 30ம் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ள நிலையில் எதிர்வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல 28ம் தேதி அன்று பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி ஒன்றியங்களில் மட்டும் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் 30ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மாவட்ட முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றும் கமுதி வட்டாரம் தவிர்த்து பிற பகுதிகளில் ஐந்து மணிக்கு மேல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!