TVK Maanadu: அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய தவெகவினர்! முக்கிய நிர்வாகி பலி! அதிர்ச்சியில் விஜய்!

First Published | Oct 27, 2024, 3:57 PM IST

TVK Maanadu: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் கார், பேருந்தில் வண்ணம் உள்ளன. இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மாநாடு நடக்க இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் வி. சாலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் மாநாட்டுத் திடலில் இருந்த நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அதேபோல் பார்க்கிங் வசதி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. 

Tap to resize

இந்நிலையில், விஜய் மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருமே தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

அதேபோல் சென்னையில் இருந்து ரயில் மூலம் விக்கிரவாண்டிக்கு ஏராளமனோர் சென்றுள்ளர். வி சாலை பகுதியில் விஜய்யின் மாநாட்டு பந்தலுக்கு 50 மீட்டர் தொலைவில் ரயில் சென்றுள்ளது. மாநாட்டு பந்தல் அருகே சென்றபோது ரயில் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக சென்றுள்ளனது. அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாநாட்டு பந்தலை பார்த்த இளைஞர்கள் 3 பேர் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் நிதிஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். 

இந்நிலையில், திருச்சியில் இருந்து மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி நோக்கி டொயோட்டா காரில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் வந்துக்கொண்டிருந்தனர். கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் திருச்சி தேற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் கலை ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன்  உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாநாட்டிற்கு பாதுகாப்பாகவும் கட்டுக்கோப்புடன் வரவேண்டும் என விஜய் கூறியிருந்த நிலையில் தற்போது 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!