Published : Oct 27, 2024, 03:31 PM ISTUpdated : Oct 27, 2024, 03:36 PM IST
TVK Vijay Maanadu in Vikravandi: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டில் திரண்டனர். விஜய் கட்சிக் கொடி, கொள்கை, கோட்பாடுகள் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் நலன் காக்க சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கட்சி சின்னத்தையும் வெளியிட்டார். இதையடுத்து தற்போது முதல் அரசியல் மாநாட்டையும் நடத்துகிறார். இன்னும் சற்று நேரத்தில் விஜய்யின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் தொடங்க உள்ள நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
24
Thalapathy Vijay First Maanadu at Vikravandi
ஏற்கனவே மாநாடு முழுவதும் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பிய நிலையில் இன்னும் ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக பல்வேறு கட்சி சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்பட்டிருந்தாலும் இந்தளவிற்கு இருந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு விஜய்யின் அரசியல் மாநாடு அமைந்துவிட்டது. அதற்கு இந்த வி சாலை டிவிகே மாநாடே ஒரே சாட்சி. ஒட்டுமொத்த தொண்டர்களும், ரசிகர்களும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தான் முதல்வர் என்று வருங்கால முதல்வர் என்றெல்லாம் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
34
TVK Maanadu in Vikravandi
இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் முதலில் கட்சி கொடி பற்றி ரகசியத்தை வெளியிடுவார் என்றும், கட்சி கொள்கை கோட்பாடு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி கொடியில் வாகை மலர் மற்றும் நிறம் மற்றும் யானைகள் இடம் பெற்றதற்கான காரணம் பற்றி தெரிவிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
என்னதான் பார்த்து பார்த்து மாநாட்டு ஏற்பாடுகள் செய்தாலும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், லட்சக்கணக்கான ரசிகர்களின் வருகையாலும் சிலர் மயக்கம் அடைந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை பார்ப்பதற்காகவே ஏராளமான சிறுவர்கள் வருகை தந்துள்ளனர்.
44
Thalapathy Vijay TVK Maanadu
இந்த மாநாட்டைத் தொடர்ந்து விஜய்யின் ஒவ்வொரு அசைவும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் தற்போது சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் அரசியல் பயணம் தமிழகத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.