திடீர் திருப்பம்! SIT விசாரணை! தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! என்ன காரணம்?

Published : Oct 08, 2025, 10:23 AM IST

TVK Vijay, Supreme Court கரூரில் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

PREV
14
தவெக தலைவர் விஜய்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

24
சிறப்பு புலனாய்வு குழு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலியானது தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து கரூரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.

34
ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கரூர் விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக் கொண்டு வர வேண்டும். உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்றால் சிறப்புக்குழு விசாரணை மூலம் முறையாக நடைபெறாது. ஆகையால் SIT விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

44
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி இன்று காலை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் தவெக முறையிட உள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories