இந்நிலையில் இது தொடர்பாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “உங்களிடம் தலைமைப் பண்பு உள்ளதா திருமாவளவன் அவர்களே?
இன்று சென்னை உயர்நீதி மன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய நிலையில், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் (வழக்கறிஞர்) மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள். சென்னையில் இது போன்ற சிறு சிறு விபத்துக்கள் தினந்தோறும் நடைபெறுவது சகஜம் என்றாலும், ஒரு கட்சி தலைவர் அமர்ந்துள்ள வாகனத்தில் வந்தவர்களும், அவரின் ஆதரவாளர்களும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட நபரை ஓட ஓட விரட்டுவது, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றியதை விட, இந்த நிகழ்வுகளை 'அடங்க மறு, அத்துமீறு' என்ற கொள்கை குன்றாக வாகனத்திலேயே அமர்ந்து கொண்டு, நடந்த தாக்குதலை கண்டிக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தொல். திருமாவளவன் அவர்களே, உங்களிடம் தலைமை பண்பு உள்ளதா? என்பதே என் கேள்வி!