Published : Oct 08, 2025, 07:21 AM ISTUpdated : Oct 08, 2025, 07:46 AM IST
ADMK, Sellur Raju | சினிமாவில் நடிகைகளை போல் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரசாரத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.
24
ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கம் நடிகைகள்
அப்போது அவர் கூறுகையில், “சினிமாவில் ரசிகர்களைக் கவர்வதற்காக நடனங்களை வைப்பார்கள். திரிஷா ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ரூ.3 முதல் 4 கோடியும், நயன்தாரா ரூ.5 கோடி வரை ஒரு பாட்டுக்க டான்ஸ் ஆட வாங்குறா. ஜிகு ஜிகுனு ஆடுறாங்க எவ்ளோ பெரிய திறமை. ரசிகர்களை கவர்வதைப் போன்ற திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி உள்ளது.
34
நீட் ரகசியம் என்னாச்சு..?
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என துணைமுதல்வர் உதயநிதி சொன்னார். ஆனால் இப்போது என்ன ஆனது..? சொத்துவரியை உயர்த்தமாட்டோம் என்றார்கள் ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்தப்படுகிறது. மேலும் நாய், பூனைக்கு கூட வரி போடுகிறார்கள்.
நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்க அளிக்க வேண்டும். நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான். நீட் ரத்து செய்யப்படும் வரை மாணவர்களுக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அதிமுக தான்.
அதிமுக நிர்வாகிகள் இனி ஒவ்வொரு வார்டாகவும், ஒவ்வொரு வீடாகவும் சென்ற திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து எடுத்துக்கூறி மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். பத்திரிகைகள் சில முக்கிய நிகழ்வுகளை செய்தியாக்காமல் நடிகர் விஜய் குறித்த கேள்விகளை எழுப்பி அதையே செய்தியாக்குகின்றனர். இனி விஜய் குறித்த எந்த கேள்விக்கும் நான் பதில் அளிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.