
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பெண்கள் குறித்துப் பேச முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் உரிமை மோசமான நிலையில் இருப்பதாகவும் இந்தியா விமர்சித்துள்ளது.
ஐ.நா.வில் விவாதத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ், 1971ஆம் ஆண்டு 'ஆபரேஷன் சர்ச்லைட்' நடவடிக்கையின்போது 4 லட்சம் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இனப்படுகொலை செய்த நாடு பாகிஸ்தான் எனக் குற்றம் சாட்டினார்.
பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விவாதத்தில் பேசிய ஹரீஷ், பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் குறித்துத் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகச் சாடினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக வருபவர்களை இனி 'நோயாளிகள்' (Patients) என்று அழைக்காமல், 'மருத்துவப் பயனாளிகள்' (Medical Beneficiaries) என்று குறிப்பிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
விஜய் தங்களிடம் வீடியோ கால் மூலம் பேசியது என்ன? என்பது குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கரூர் சம்பவத்தில் இறந்தவரின் மனைவி சங்கவி என்பவர் பேசுகையில், ''விஜய் இன்று காலை வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார். என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன். நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்தவுடன் அனுமதி கிடைத்ததும் நான் நேரில் வருகிறேன் என்று விஜய் கூறினார்'' என்றார்.
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கிய தனியார் பேருந்து ஒன்று முழுவதும் மண்ணில் புதைந்துள்ளது. அதில் பயணித்தவர்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சோகமான சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) பாலு பாலம் (Ballu Bridge) அருகே நிகழ்ந்துள்ளது. மாரோட்டன்-கலாவுல் (Marotan–Kalaul) வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது, மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தது.
2025ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சுற்று தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக, ராயல் சுவீடிஷ் அகாடமி கூறியுள்ளது.
நோபல் பரிசுக் குழுவின் இயற்பியல் பிரிவு தலைவர் ஒல்லே எரிக்சன் இதுகுறித்து பேசுகையில், "நூறு ஆண்டுகள் பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் பயனுள்ளது. குவாண்டம் இயக்கவியல்தான் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையாக உள்ளது," என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JD(S)) மூத்த தலைவருமான எச்.டி. தேவகவுடா (வயது 92), சிறுநீரகப் பாதை தொற்று (UTI) மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'பாடம் கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்ததற்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு எம்.பி சீட்டுக்காக கமல்ஹாசன் தனது ஆன்வை விற்று விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக பேசிய கமலை அவர் கண்டித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ''கரூர் சம்பவத்தில் காவல்துறையை குற்றம் சொல்ல முடியாது. தமிழக அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது" என்றார்.
காவிரி பாசன மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன. கிடங்கு பற்றாக்குறை மற்றும் கொள்முதல் மந்தத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ட்ரோன் பைலட் உரிமம் பெற்றுள்ளார். தோனி மிக விரைவாக இதை கற்றுக் கொண்டதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.