பாதிக்கப்பட்டவர்களிடம் தனது போன் நம்பர் கொடுத்து விஜய் சொன்ன விஷயம்! வீடியோ காலில் பேசியது இதுதான்!

Published : Oct 07, 2025, 05:43 PM IST

கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசிய விஜய் என்ன சொன்னார்? பாதிக்கப்பட்டவர்கள் விஜய் குறித்து என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
15
கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் தவெக தலைவர் விஜய் உடனடியாக த‌னி விமானத்தில் சென்னை சென்றது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே வராத விஜய், கரூர் சம்பவம் குறித்து உருக்கமான வீடியோ வெளியிட்டார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அறிவித்தார்.

25
இறந்தவர்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிய விஜய்

காவல்துறை அனுமதி கொடுத்தவுடன் விஜய் கரூர் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவார் என தவெக சார்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கரூர் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் சென்னை வீட்டில் இருந்து வெளியே வராத விஜய், கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

35
வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

இந்நிலையில், விஜய் தங்களிடம் வீடியோ கால் மூலம் பேசியது என்ன? என்பது குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கரூர் சம்பவத்தில் இறந்தவரின் மனைவி சங்கவி என்பவர் பேசுகையில், ''விஜய் இன்று காலை வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார். என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன். நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்தவுடன் அனுமதி கிடைத்ததும் நான் நேரில் வருகிறேன் என்று விஜய் கூறினார்'' என்றார்.

45
விஜய் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை

தொடர்ந்து பேசிய சங்கவி, ''விஜய் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை. இவ்வளவு கூட்டம் கூடியதற்கு அவர் என்ன செய்வார்? அவர் மீது எந்த தவறும் இல்லை. கூட்டத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. கூடுதல் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்திருக்க வேண்டும். நான் கூட்டத்துக்கு போகவில்லை. எனது கணவர் தான் சென்றிருந்தார். அவர் டெயலர். வேலை முடிந்து அவர் கூட்டத்துக்கு சென்றபோது தான் அவர் அதில் சிக்கிக் கொண்டார்'' என்று தெரிவித்தார்.

55
போன் நம்பர் கொடுத்த விஜய்

இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் மருமகனை பறிகொடுத்த சுமதி என்ற பெண் கூறுகையில், ''விஜய் என்னிடம், 'அம்மா பாப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள். பையனை பார்த்துக் கொள்ளுங்கள். நான் நேரில் வந்து ஆறுதல் சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு போன் செய்யுங்கள்' என்று கூறி போன் நம்பர் கொடுத்தார் '' என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories