தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண்மைப் பொறியியல் துறை குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்கலாம்.
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை வேளாண்மை உற்பத்தி, உள்கட்டமைப்பு, மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாகக் கொண்டவையாகும். அந்த வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் விவசாய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
26
விவசாயிகளுக்கான மானியம் , கடன் உதவி திட்டங்கள்
பயிர்க்கடன் மற்றும் கால்நடை கடன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மூலம் 81 லட்சம் விவசாயிகளுக்கு 62,352 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க 100% மானியம் வழங்கப்படுகிறது.
சூரிய சக்தி மற்றும் மின் சக்தி பம்பு செட்டுகள் அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளை இயற்கை சீற்றம் ஒரு வகையில் பாதிப்படைய செய்தால் மற்றொரு பக்கம் பயிர்களில் பூச்சிகளும் விவசாயிகளை இழப்பீடு சந்திக்க வைக்கும்.
36
தமிழகத்தில் தென்னை சாகுபடி
அந்த வகையில் தமிழகத்தில் தென்னை மர உற்பத்தி வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய தென்னை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாகும், குறிப்பாக தேங்காய் மற்றும் அதன் பிற பொருட்களின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மிழ்நாட்டில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 600-700 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன,
இதில் 60% சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகள் தென்னை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் 31% தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கிறது, மேலும் உலகளவில் இந்தியா 75% உற்பத்தியில் பங்களிக்கிறது
ஆனால் தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சியால் தென்னை மரங்களில் உற்பத்தி குறைந்து மரங்களும் பட்டுப்போகும் நிலை உருவாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த தெளிப்பான் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
56
வெள்ளை ஈ பூச்சியை கட்டுப்படுத்த திட்டம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து (ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பெண்ணெய் 5 மில்லி லிட்டர் + 5 கிராம் காதி சோப் + 1 மில்லி லிட்டர் ஒட்டும் திரவம்) கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தென்னை மரங்களைக் காப்பாற்றலாம். ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 500 லிட்டர் தண்ணீரையோ மருந்துக் கலவையையோ, 35 முதல் 45 தென்னை மரங்களின் தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பில் பீய்ச்சி அடிக்கலாம்.
66
ஒரு மணி நேரத்திற்கான வாடகை ரூ. 450/
இவ்வியந்திரம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, கோபிச்செட்டிபாளயம் உட்பட 20 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையிடம் உள்ளது. இ-வாடகை கைபேசி செயலி மூலம், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்திற்கான வாடகை ரூ. 450/- என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே. பொ) அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.