தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சூப்பர் சான்ஸ்.! மீண்டும் சிறப்பு ரயில் அறிவித்த தெற்கு ரயில்வே

Published : Oct 15, 2025, 12:58 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை - போதனூர் திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

PREV
14

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இப்போதே ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்துள்ளனர். 

ஆனால் தனியார் பேருந்துகளில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் சாதாரண மக்களால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24

சென்னை சென்ட்ரல் – போதனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (ரயில் எண்: 06049 / 06050) இயக்கப்படவுள்ளது. (ரயில் எண் 06049) டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் புறப்படும் எனவும் இந்த ரயில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு போதனூருக்கு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்று சேர்கிறது.

போதனூர் ரயில் நிலையத்தில் இருந்து (ரயில் எண் 06050) அக்டோபர் 18 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் எனவும், அதே நாள் இரவு 11.10 மணிக்கு சென்னை வந்தனையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் பெரம்பூர் திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி சேலம் ஈரோடு திருப்பூர் வழியாக போதனூர் சென்றடைகிறது. 2 – ஏ.சி. திரி-டயர், 8 – தூங்கும் வகை, 8 – பொதுவகை, 2 – மாற்றுத் திறனாளி நட்பு இரண்டாம் வகை வண்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34

இதே போல போதனூர் – சென்னை சென்ட்ரல்வரை (ரயில் எண்: 06100) ஒரே வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. போதனூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு ரயில் பெரம்பூர் திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி சேலம் ஈரோடு திருப்பூர் வழியாக போதனூர் சென்றடைகிறது. 2 – ஏ.சி. திரி-டயர், 8 – தூங்கும் வகை, 8 – பொதுவகை, 2 – மாற்றுத் திறனாளி நட்பு இரண்டாம் வகை பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

தாம்பரம் – கன்னியாகுமரி - செங்கல்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்: 06133 / 06134) இயக்கப்படவுள்ளது. ரயில் எண் 06133 தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் மதியம் 1.25 மணிக்கு சென்று சேர்கிறது.

இதேபோல (எண் 06134) கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு

மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 6 – தூங்கும் வகை, 12 – பொதுவகை, 2 – மாற்றுத் திறனாளி நட்பு இரண்டாம் வகை பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 15.10.2025 மதியம் 2.15 மணி முதல் தொடங்கும் எனவும், ரயில் எண் 06100 க்கு முன்பதிவு 16.10.2025 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories