12 மணினு சொல்லிட்டு 7 மணிநேரம் கழித்து வந்தது தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்.. சட்டசபையில் தவெகவை வறுத்தெடுத்த முதல்வர்

Published : Oct 15, 2025, 11:51 AM IST

TVK Vijay Stampede Issue in Tamil Nadu Assembly | கரூர் அசம்பாவிதம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தார்.

PREV
15
சட்டசபையில் தவெக.வை வறுத்தெடுத்த ஸ்டாலின்

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ கண்காணிப்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

25
மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டதால் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் அசம்பாவிதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் வேலுசாமிபுரம் பரப்புரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

35
12 மணி என சொல்லிவிட்டு 7 மணிக்கு வந்தது ஏன்..?

பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பாதுகாப்பு வழங்குமாரு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் 12 மணிக்கு விஜய் வருவார் என்று பதவிட்டார். இதன் காரணமாக காலை முதலே அப்பகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் கூடத் தொடங்கினர். 12 மணிக்கு கட்சியின் தலைவர் வருவார் என்று பதிவிட்ட நிலையில், மாலை 7 மணியளவில் தான் கட்சியின் தலைவர் வந்து சேர்ந்தார். அங்கு கூடியிருந்தவர்களுக்கு வழங்க அக்கட்சி சார்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் காலை முதலே நின்று கொண்டிருந்த மக்கள் பலரும் மிகவும் சோர்வுற்றனர். மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததே அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

45
தவெக.வினரை எச்சரித்த காவல்துறை

மேலும் வேலுச்சாமி புரத்தில் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்சியின் பொதுச் செயலாளர், இணை பொதுச்செயலாளரை தொடர்பு கொண்டு பிரசார வாகனத்தை தேர்வு செய்த இடத்திற்கு சற்று முன்பாகவே நிறுத்தி பேசுமாறு வலியுறுத்தினார். ஆனால் அதனை அக்கட்சி நிர்வாகிகள் கேட்கவில்லை. பேருந்து அப்பகுதிக்கு வந்ததால் மக்கள் செல்ல வழியின்றி நெரிசல் ஏற்பட்டது.

55
அதிமுக.வை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

சம்பவம் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதே பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12000 முதல் 15000 தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் மிகவும் கட்டுக்கோப்போடு நடந்து கொண்டனர்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories