3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை.! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை

First Published | Oct 8, 2024, 1:47 PM IST

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

t.nagar

வேலை தேடி வெளியூர் பயணம்

சொந்த ஊரில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கானவர்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் சென்று பணி புரிந்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ்,புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மட்டும் தங்களது அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள், நண்பர்களை பார்க்க செல்வார்கள். அந்த வகையில் கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்து மூலம் மட்டும் பயணித்துள்ளனர்.

எனவே எப்போதும் தொடர் விடுமுறை கிடைக்கும் சொந்த ஊருக்கு செல்லலாம் என திட்டமிடுபவர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை வாய்ப்பாக அமைந்துள்ளது.. இதன் காரணமாக வருகிற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனை பயன்படுத்தி ஏராளமானோர் வெளியூர் செல்லவுள்ளனர். 

koyambedu

3 நாட்கள் தொடர் விடுமுறை

அந்த வகையில் தமிழக அரசின் போக்குவரத்து துறையின் சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை பண்டிகை  மற்றும் தொடர் விடுமுறையையொட்டி அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில்  சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக  தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை  இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

tamilnadu bus

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர்  ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி புதன்கிழமை அன்று 225 பேருந்துகளும், அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமையன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி புதன்கிழமை அன்று 35 பேருந்துகளும் 10ஆம் தேதி  வியாழக்கிழமையன்று 265 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து  அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் 110 சிறப்பு பேருந்துகளும்  இயக்கப்படுவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

kilambakkam

சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்து

மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகிற புதன் கிழமை அன்று 6 ஆயிரத்து 582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22 ஆயிரத்து 236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21 ஆயிரத்து 311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்  தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

Latest Videos

click me!