வண்டி, வண்டியாக தமிழகத்திற்கு வரும் வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்

First Published | Oct 8, 2024, 12:19 PM IST

தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ள நிலையில், கூட்டுறவு கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 30 டன் வெங்காயம் தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் சைவ பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தக்காளி விலையோடு போட்டி போட்டு வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை வெங்காயமானது கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

தற்போது தொடர் மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிரிடப்பட்ட வெங்காயம் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே ஒரு கிலோ வெங்காயம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 35 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
 

onion

எனவே வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் 35 ரூபாய்க்கு வெங்காயம் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெங்காய விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தேசிய கூட்டுறவு அமைப்பிடம் இருந்து, தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் முதல் கட்டமாக 30 டன் வெங்காயத்தை வாங்கி உள்ளது.  பொதுமக்களுக்கு குறைவான விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Tap to resize

onion 6.

இதன்படி மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து வந்துள்ள இந்த வெங்காயம், சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.  

மேலும் ஒருவரே அதிகளவு வெங்காயத்தை வாங்கி செல்வதை தடுக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டும் வெங்காயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல விரைவில் தக்காளியையும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

onion 2

இதனிடையே  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 65 ரூபாய் முதல் 85 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Latest Videos

click me!