Tamilnadu rain
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைப் பொழிவு வருகின்ற 13ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rains
10ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவாரூர், நெல்லை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Updates
மேலும் தொடர்ச்சியாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 10ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள நிலையில், அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilnadu rain
இந்நிலையில், இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். காற்று பலமாக வீசும் என்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.