தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! செந்தில் பாலாஜிக்கு எந்த மாவட்டம் தெரியுமா.?

Published : Oct 08, 2024, 12:38 PM ISTUpdated : Oct 08, 2024, 12:45 PM IST

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார்.

PREV
15
தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! செந்தில் பாலாஜிக்கு எந்த மாவட்டம் தெரியுமா.?
cabinet

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள்

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 

25

மூத்த அமைச்சர்களுக்கு எந்த மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு 

தேனி மாவட்டத்திற்கு  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி 

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு  பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ. வேலு 

தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

35
kkssr and thangam thennarasu

நிதி அமைச்சருக்கு எந்த மாவட்டம்.?

தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 

நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் 

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர. சக்கரபாணி 
 

45
senthil balaji

மீண்டும் கோவையை கைப்பற்றிய செந்தில் பாலாஜி

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி 

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 

பெரம்பலூர் மாவட்டத்திற்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் 

55

அன்பில் மகேஷக்கு கூடுதல் பொறுப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் அவர்களையும் நியமித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories