நாளை வெளியாகிறது அமைச்சரவை மாற்ற அறிவிப்பு.? யார் யாருக்கு பதவி.? யாரெல்லாம் அமைச்சரவையில் இருந்து நீக்கம்.?

First Published Jul 18, 2024, 1:19 PM IST

தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், குறிப்பாக உதயநிதிக்கு ஜாக்பாட் அடிக்க இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு சில அமைச்சர்கள் மாற்றப்பட்டு வட மாவட்டங்களில் உள்ள திமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 

சட்டமன்ற தேல்தல் - களம் இறங்கும் திமுக

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களை வெற்றி பெற்று எதிர்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்ததாக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக திமுக நிர்ணயித்துள்ளது. இதற்காக தற்போதே தேர்தல் பணிக்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகிறது.

விரைவில் கட்சி ரீதியாக மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், ஒரே நாளில் அதிரடியாக 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்வாக ரீதியாக அமைச்சரவையில் சில மாறுதல்கள் மேற்கொள்ள  வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 

அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள்  பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு வெளிநாடு பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தலைமைசெயலக வட்டாரம் கூறியுள்ளது.

TN BJP: ஜவுளிக்கடையில் 4 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய அமர்பிரசாத்.!வீடியோ வெளியிடவா.? மிரட்டும் திருச்சி சூர்யா

Latest Videos


udhayanidhi

அமைச்சரவையில் கை வைக்கும் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன்பாக  அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதன் படி துறை செயலாளர்கள் மாற்றம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்துறை செயலாளர் உள்ளிட்ட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அமைச்சரவையிலும் கை வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த ஒரு சில வாரங்களாக ஆலோசனை நடைபெற்ற நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உதயநிதிக்கு துணை முதலமைச்சர்.?

குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருப்பதோடு, துணை முதலமைச்சர் பொறுப்பும் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை புதிய அமைச்சரவை மாற்றம் வெளியாக இருப்பதாகவும் அதில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என கூறப்படுகிறது.

அமைச்சர்களில் இலாக்காக்கள் மாற்றம்.?

அந்த வகையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் அப்போது அவருக்கு உள்ளாட்சி துறை வழங்கலாம் எனவும், அமைச்சர் கேஎன் நேருவிற்கு போக்குவரத்து துறை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மூத்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு மின்சாரத்துறையும், இதே போல அமைச்சர் பிடிஆருக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ration Shop : ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பு நிறுத்தமா.? அதிரடியாக புதிய முடிவு எடுத்த தமிழக அரசு

stalin governor

மேலும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட ஒரு சில துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு வட மாவட்டங்களில் உள்ள புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவையில் இருந்து மதிவேந்தன், காந்தி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் பெயர்கள் நீக்கப்படுவதற்கான பட்டியலில்  அடிபடுகிறது.

எனவே நாளை  ஆளுநர் மாளிகை அறிக்கையில் இருந்து வெளியாகும்  அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பை ஆவலோடு உடன்பிறப்புகள் எதிர்நோக்கி காத்துள்ளனர். 

click me!