Crime: ஆண் குழந்தை பிறக்காததால் விரக்தி; பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை

Published : Jul 18, 2024, 01:17 PM IST

சென்னை அடுத்த வியாசர்பாடியில் 3வதும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த தந்தை குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
Crime: ஆண் குழந்தை பிறக்காததால் விரக்தி; பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை

சென்னை வியாசர்பாடி அடுத்த சுந்தரம் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 38), விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 5 மற்றும் இரண்டரை வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதிடையே மூன்றவதாக கருவுற்றிருந்த விஜயலட்சுமிக்கு கடந்த மாத இறுதியில் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் மூன்றாவதாக பிறக்கும் குழந்தை நிச்சயம் ஆண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ராஜ்குமார் தீர்க்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

24

இந்நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே கடந்த 7ம் தேதி பச்சிளம் குழந்தையை உறங்க வைத்துவிட்டு விஜயலட்சுமி குளிக்கச் சென்றுள்ளார். அவர் மீண்டும் வந்து பார்க்கையில் குழந்தையின் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த காயத்துடன் குழந்தை துடித்துள்ளது. இதனை பார்த்து கதறிய விஜயலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

34

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், குழந்தை கடந்த 9ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் குழந்தையின் தந்தை ராஜ்குமார் தான் கொலை செய்தார் என்பதை உறுதி செய்தனர்.

44

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கத்திரியால் குழந்தையை குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!

Recommended Stories