Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் 5 மணிநேரம் மின்தடை? முழு லிஸ்ட் இதோ!

First Published | Nov 6, 2023, 7:56 AM IST

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

power cut in chennai

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நவம்பர் 6-ந் தேதியான இன்று, சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

power cut areas

அதன்படி, இருளப்பட்டு, ஜனபதி சத்திரம், நெடுவரவாக்கம், ஜெகநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவும் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... "வேலையில் ஸ்ட்ரிக்ட்.. அவர் ஒரு இரும்பு பெண்மணி".. பெங்களூரு அரசு அதிகாரி கொடூர கொலை - சக ஊழியர் சொன்ன தகவல்!

Latest Videos

click me!