தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அடையார்:
டைடல் பார்க் சிபிடி வளாகம், கானகம் வீட்டுவசதி வாரியம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
ஈஞ்சம்பாக்கம்:
அக்கரை கிராமம், அல்லிக்குளம், அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு & தெற்கு, காப்பர் கடற்கரை சாலை, இசிஆர், கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர் குப்பம், ராஜீவ் அவென்யூ, திருவள்ளூர் சாலை, டிவிஎஸ் அவென்யூ, விஓசி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
ஆவடி:
சோத்துப்பெரும்பேடு காரனோடை, தேவநேரி, சிறுனியம், ஒரக்காடு, ஞாயிறு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.