Vegetable Price : புதிய உச்சத்தில் இஞ்சி விலை.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் என்ன?

First Published | Sep 8, 2023, 8:48 AM IST

கோயம்பேடு மார்க்கெட்டில் எந்தெந்த காய்கள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்று அழைக்கப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை தினமும் மாறுபடுகிறது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் எந்தெந்த காய்கள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.18க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.45-க்கும், பெங்களூரு கேரட் கிலோ ரூ.20க்கும், பீன்ஸ் ரூ.55-க்க்ம், ஊட்டி பீட்ரூட் ரூ.30க்கும், கர்நாடக பீட்ரூட் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

சௌசௌ ஒரு கிலோ ரூ.15க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், முட்டை கோஸ் கிலோ ரூ.15-க்கும் வெண்டைக்காய் ரூ.15-க்கும், கத்திரிக்காய் ரூ.15-க்கும், வரி கத்திரி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புடலைங்காய் ஒரு கிலோ ரூ.12க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும் சேனைக்கிழங்கு ரூ.44க்கும், முருங்கைக்காய் 25 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ரூ.15-க்கும் விற்பனையாகிறது.

பச்சை மிளகாய் ரூ.35-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், பச்சை குடை மிளகாய் ரூ.25-க்கும், வண்ண குடை மிளகாய் ரூ. 70க்கும், மாங்காய் ரூ.80-க்கும், வெள்ளரி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.200-க்கும், பூண்டு ரூ.150-க்கும், மஞ்சள் பூசணி ரூ.18-க்கும், வெள்ளை பூசணி ரூ.20-க்கும், பீர்க்கங்காய் ரூ.35-க்கும், எலுமிச்சை ரூ.120-க்கும் விற்பனையாகிறது.

Vegetable

கோவக்காய் ரூ.25க்கும், கொத்தவரங்காய் ரூ.25-க்கும், வாழைக்காய் ரூ.7-க்கும், வாழைத்தண்டு ரூ.50-க்கும், வாழைப்பூ ரூ.20-க்கும், கீரை ரூ.10க்கும் தேங்காய் ரூ.26-க்கும் விற்பனையாகிறது.

Latest Videos

click me!