சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேர சந்திப்புக்கு பிறகு செங்கோட்டையன் காரில் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பொறுப்பு?
செங்கோட்டையனை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். சுமார் 50 ஆண்டு காலம் அரசியலில் அனுபவம்வாய்ந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் பெரிய பதவி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.
இதனை உணர்ந்து கொண்ட விஜய், தவெகவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம் அளிப்பபதாகவும், அமைப்பு செயலாளர் போன்ற பொறுப்பு கொடுப்பதாகவும் செங்கோட்டையனிடம் இன்று உறுதி அளித்துள்ளார்.