பள்ளி மாணவர்களே தேர்வுக்கு தயாரா? ஹால்டிக்கெட் வெளியீடு! ரூ.1000 கொடுக்கும் தமிழக அரசு!

Published : Nov 26, 2025, 03:50 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 தொகை. நவம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

PREV
15
பள்ளி மாணவர்கள்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சூப்பரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் ஊரக திறனாய்வு தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

25
ஊரக திறனாய்வு தேர்வுகள்

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகை சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்கும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திறனாய்வு தேர்வு நவம்பர் 29ம் நடைபெறுவதையொட்டி விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

35
தேர்வுத்துறை இயக்குநரகம்

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

45
ஹால் டிக்கெட்கள்

அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

55
தலைமை ஆசிரியர்கள் கையொப்பம்

ஹால்டிக் கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால் டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories