கொஞ்சம் கூட அவமானமாகவே இல்லையா ஸ்டாலின்! அதுவும் ஸ்கூல்ல இப்படியா? திமுக அரசை லெப்ட் ரைட் வாங்கிய வானதி!

Published : Aug 26, 2025, 09:33 AM IST

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் இசை மற்றும் தாவரவியல் ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
15

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 10, 11 வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததனர். அதில் பள்ளியில் உள்ள இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் இருவரும் தங்களிடம் பேட் டச்சில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

25

இதையடுத்து மகளிர் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அரசு பள்ளியில் பணியாற்றும் இசை ஆசிரியர் செல்வராஜ், தாவிரவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதை தமிழக அரசு அவமானமாக கருத வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

35

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில். அப்பள்ளி மாணவிகள் சிலர், ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள் நடப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

45

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் என்பவர் பாடம் கற்பிக்கும் குரு மட்டுமல்ல. தந்தயாக, சகோதரனாக இருந்து வாழ்விற்கு வழிகாட்ட வேண்டியவர். அப்படி நடக்கும் என்று நம்பிதான் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது பெரும் கொடுமை. இத்தகைய பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

55

பெண்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதை தமிழக அரசு அவமானமாக கருத வேண்டும். பாலியல் சீண்டல்கள் நடந்த கிணத்துக்கடவு மேல்நிலைப்பள்ளி அரசுப் பள்ளி என்பதால், மாணவிகளின் பாதுகாப்பிற்கு தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, தங்களின் கடமையை உணர்ந்து பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories