பள்ளி விடுமுறை என்றாலே அளவில்லா சந்தோஷம் தான். அதவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025-26க்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகவும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.