விஜய்யை விட அதிக கூட்டத்தை சேர்த்தவர் சிரஞ்சீவி.! ஆனா கட்சியவே கலைச்சுட்டு போய்டார்- போட்டு தாக்கும் எஸ்.பி.வேலுமணி

Published : Aug 26, 2025, 08:33 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அரசியல் மோதல் வெடித்துள்ளது. விஜய்யின் அதிமுக தலைமை குறித்த விமர்சனத்திற்கு எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு பக்கம் ஓரணியில் தமிழ்நாடு என பிரச்சாரத்தை திமுக தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என மக்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி, 

இதே போல தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க தேதி குறித்துள்ளார் நடிகர் விஜய், இதற்கு முன்னதாக மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுக தலைமை தொடர்பாக விமர்சித்திருந்தார்.

24
அதிமுக தலைமையை விமர்சித்த விஜய்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடியார் வருகின்ற ஒன்றாம் தேதி திருமங்கலம் தொகுதிக்கு வருவதை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி‌வேலுமணி ஆலோசனை வழங்கினார். 

அப்போது பேசிய எஸ்.பி.ஆர்.பி .உதயகுமார், இதே மதுரை மண்ணில் தான் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா 2010 ஆம் ஆண்டு கோவையில் முதன்முதலாக கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கினார் ,அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்றுது, மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்து அதற்குப்பின் அம்மா கோட்டைக்கு சென்றார், அதேபோல எடப்பாடியார் மதுரைக்கு எழுச்சி பயணத்தை மேற்கொண்டு விரைவில் கோட்டைக்கு செல்வார் என்ற நிலையை மக்கள் உருவாக்குவார்கள் என தெரிவித்தார்.

34
பதிலடி கொடுத்த எஸ்பி வேலுமணி

தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறு முறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது. இன்றைக்கு நடிகர் விஜய் அதிமுக தலைமை யாரிடம் உள்ளது என்று பேசியுள்ளார். அதிமுகவின் தலைவர் எடப்பாடியார் தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். 

ஆனால் இவருக்கு தெரியவில்லை. மதுரையில் விஜய்க்கு கூடியதை விட பெரிய கூட்டம் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜாராஜியம் என்ற கட்சியை தொடங்கினார் பிரம்மாண்டமான கூட்டத்தை காண்பித்தார் ஆனால் கட்சி கலைத்து போய் விட்டார். எனவே எடப்பாடியாரை பற்றி பேச இவருக்கோ,வேறுயாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்தார்.

44
2026ல் இபிஎஸ் ஆட்சி அமைப்பார்

இன்றைக்கு மீடியாக்கள் திமுகவிக்கும் விஜய்க்கும் போட்டி என்று செய்தி போடுகிறார்கள் அதிமுக ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதி வெற்றி வாகை சூடும். மீண்டும் 2026 ஆண்டு எடப்பாடியார் தான் முதலமைச்சர் இதை விஜய் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது என கூறினார். 

எடப்பாடியார் ஒரு கிளைக் கழக செயலாளர் இருந்து தன் உழைப்பால் கழகப் பொதுச் செயலாளர் ஆனார். 1989 ஆண்டில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் இப்படி படிப்படியாக முன்னேறியவர் இது அனைவருக்கும் தெரியும் ஆனால் விஜய்க்கு தெரியவில்லை என கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories