ஒரே நாளில் சரசரவென உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? காரணம் என்ன.?

Published : Aug 26, 2025, 07:38 AM IST

தக்காளி விலை கிலோ ரூ.60ஐத் தாண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மழை மற்றும் விசேஷ நாட்கள் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெங்காயம் விலை சரிந்துள்ளது.

PREV
15
சமையலும் காய்கறிகளும்

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், அந்த வகையில் பலவகையான பச்சை காய்கறிகள் முதல் தக்காளி, வெங்காயம் குவிந்து கிடந்தாலும், பெரும்பாலம் மக்கள் அதிகமாக வாங்குவது தக்காளி மற்றும் வெங்காயத்தை தான், ஏனென்றால் மற்ற காய்கறிகளை விட இதன் தேவை அதிகமாகும், சமையலில் ருசியை கொடுக்கும், 

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலைமை திண்டாட்டம் தான். அதுவே விலை குறைந்தால் கொண்டாட்டம் தான். அப்படி தான் கடந்த சில வாரங்கள் வரை தக்காளி விலை சரிந்து இருந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. 50 ரூபாய்க்கு 5 கிலோ தக்காளியை பை நிறைய மக்கள் வாங்கி சென்றனர்.

25
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை உயர தொடங்கியது. ஒரு கிலோ 30 ரூபாயை தொட்ட தக்காளி விலை தற்போது 60 ரூபாயை தாண்டியுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைவான அளவே தக்காளியை வாங்கி செல்கிறார்கள். அதேநேரம் வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது. 

ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பல்வேறு மாநிலங்களில் மழையானது கொட்டி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விஷேச நாட்கள் காரணமாகவும் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

35
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்ம், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

45
கேரட் ஒரு கிலோ என்ன.?

காலிபிளவர் ஒன்று 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

55
தக்காளி விலை என்ன.?

தக்காளி தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. சிறிய அளவிலான தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கு நடுத்தரமான தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தரமான தற்காலிகளே 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது இதுவே சில்லரை வணிகம் மற்றும் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாய் வரை விற்பனையாகிறது

Read more Photos on
click me!

Recommended Stories