Published : May 01, 2025, 11:18 AM ISTUpdated : May 01, 2025, 11:40 AM IST
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் அலுவலகத்தின் அறிவிப்பிற்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக வெளியே தலைகாட்ட முடியாத நிலையானது நீடித்து வருகிறது. பகல் வேளைகளில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கும் நிலை நீடிக்கிறது. மேலும் வருகிற 4 ஆம் தேதி முதல் அக்னி வெயில் தொடங்கவுள்ளது. தற்போது உள்ள வெயிலை விட பல மடங்கு வெப்ப காற்று வீசப்படவுள்ளது. இதனால் அரசு சார்பாக பல விதி முன்னெச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
25
அனல் காற்றால் தவிக்கும் மக்கள்
பகல் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. எனவே வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது உச்சத்தை தொட்டுள்ள வெயில் ஜூலை மாதம் தான் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
35
பள்ளிகளுக்கு விடுமுறை
எனவே ஒரு சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டு ஜூன் 3ஆம் தேதி அல்லது ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே ஜூன் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரம் பள்ளிகளை திற்ற வேண்டும் என்ற கோரிகைக எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா.? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். மே தினம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
திருச்சியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவரிடம், வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா.? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திருச்சி மாவட்டம் தற்போது 104 டிகிரி வெயில் உள்ளது. உரிய நேரத்தில் முடிவெடுத்து ஜூன் மாதம் 8ஆம் தேதி தெரிவித்துள்ளோம். அன்று வெயில் குறித்து தமிழக முதல்வர் அலுவலகம் என்ன சொல்லுகிறதே அதன்படி பள்ளி திறக்கப்படும் என கூறினார்.
55
கூடுதல் கட்டணம் - அரசு எச்சரிக்கை
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது அதிக அளவு கட்டணம் வாங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, அதிகம் அளவு கட்டணம் வாங்க கூடாது அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ நிர்ணயித்திருப்பதை காட்டிலும் அதிக படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் கூறினார்.