Published : May 01, 2025, 10:48 AM ISTUpdated : May 01, 2025, 10:52 AM IST
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் காற்று சந்திப்பதால், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கு அஞ்சு நடுங்கி வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதன்படி வேலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர், பரமத்தியில் 104 டிகிரி, ஈரோட்டில் 103 டிகிரி, சேலத்தில் 102 டிகிரி , திருத்தணியில் 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
24
Tamilnadu Rain
இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை
இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
34
Tamilnadu heatwave
வெப்ப நிலை உயரும்
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.